மகளிர் தின விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

மகளிர் தின விழாவை முன்னிட்டு  இலவச  மருத்துவ முகாம்
X

மகளிர் தினத்தையொட்டி  பொதுமக்களுக்குஇலவச மருத்துவ முகாம் நடந்தது.

Free Medical Camp கோடுவெளிஊராட்சியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Free Medical Camp

மகளிர் தின விழாவை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஊராட்சிமன்ற தலைவர் சித்ராகுமார் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,புத்தர் மனிதநேயத்திற்கான அமைப்பு,லயோலா,எம்.எஸ்.எஸ்.டபிள்யூ மதுரை அமெரிக்கன்,லேடி டி.ஓ.சி மதுரையைச் சேர்ந்த சமூக பணி மாணவர்கள்,அண்ணா ஆதாஷ்,மார் கிரிகோரியோஸ், கல்லூரிகள், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மற்றும் இலவசமாக மருந்து வழங்கப்பட்டது.

காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவ முகாமில் டாக்டர்கள் சாருலதா, ருத்ரா,சுப்ரதா ஆகியோர் தலைமையில் வந்திருந்த 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இந்த மருத்துவ முகாமை

சிறப்பாக ஒருங்கிணைத்தார். முடிவில்,ஊராட்சி செயலர் தாட்சாயணி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோடுவெளி ஊராட்சிமன்ற நிர்வாகம் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.மேலும்,இந்த ஊராட்சியைச் சேர்ந்த மனோஜ்,நிதிலா,துர்கா, பாவனா ஆகிய 4 மாணவர்களுக்கு ஹோலி கிராஸ் பாதர்ஸ் குழுவின் சார்பில் ஞானப்பிரகாசம்,ஆரோக்கிய சகாயராஜ் ஆகியோர் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு,பயிற்சி வகுப்பு, நீட் தேர்வுக்கான கட்டணம் ஆகியவற்றை செய்து தந்தனர்.எனவே,அந்த மாணவர்களையும், அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளையும் ஊராட்சிமன்ற தலைவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story