பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் ஊராட்சியில் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள எம். என் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்க்கு வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.

தனியார் மருத்துவமனை மேற்பார்வையாளர் சத்யா மற்றும் வழக்கறிஞர் லிங்கன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் 10.கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு கருவிழி கண் பரிசோதனை,கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை, சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் விழித்திரை பரிசோதனை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைந்த விலைக்கு மூக்கு கண்ணாடி கண் சொட்டு மருந்து உள்ளிட்டவை வழங்கப்பட்டது . இதில் வெங்கல் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் வார்டு உறுப்பினர்கள் கோடீஸ்வரன்,காஞ்சனா கண்ணன், தன்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக வெங்கல் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

Tags

Next Story
சாலையில் ஸ்கூட்டர் மீது கார் மோதியத்தில் ஸ்கூட்டர் நசுங்கி விபத்தில் தாயும் மகனும்  படுகாயம்!