354 மாணவி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கல்

354 மாணவி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கல்
X

பெரியபாளையம் அருகே வெங்கல், குருவாயல் ஆகிய அரசு பள்ளியில் பயிலும் மாணவி, மாணவர்களுக்கு அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்னார்.

வெங்கல், குருவாயல் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அரசு விலையில்லா மிதிவண்டிகளை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் மத்திய ஒன்றியம் வெங்கல் மற்றும் குருவாயல் கிராமங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர்கள் செந்தில் குமார், ஸ்டெல்லா கிறிஸ்டி பாய் ஆகியோர் தலைமை தாங்கினார் .

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட துணை செயலாளர் வி.ஜெ.சீனிவாசன், கோடுவெளி எம். குமார், மாவட்ட பிரதிநிதி வெங்கல் ஜி.பாஸ்கர் பி. ஒன்றிய அவைத் தலைவர் பி.ஜி.முனுசாமி, வழக்கறிஞர் அன்பு, மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், ஒன்றிய துணைச் செயலாளர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு வெங்கல் பள்ளியில் பயிலும் 190 மாணவர்களுக்கு மிதிவண்டிகளும், குருவாயல் பள்ளியில் 82 என மொத்தம் 272 மாணவ - மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, இங்கு பள்ளி வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்தனர். விரைவில் அந்த பள்ளி வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் நிர்வாகிகள் ரஜினி, டேவிட், ஜெகன், ராஜேஷ், உதயசூரியன், புல்லட் மாரிமுத்து, சேட்டு, பொன் முத்துக்குமார், மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் துணை தலைமையாசிரியர்கள் சரவணன், பரமானந்தம் நன்றி கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்