பூந்தமல்லி தனி கிளை சிறையில் விலை உயர்ந்த ஐ போன், கஞ்சா பறிமுதல்

பூந்தமல்லி தனி கிளை சிறையில் விலை உயர்ந்த ஐ போன், கஞ்சா பறிமுதல்
X

பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு அமைந்துள்ள தனி கிளை சிறை வளாகம் (கோப்பு படம்)

பூந்தமல்லி தனி கிளை சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் விலை உயர்ந்த ஐ போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி தனி கிளை சிறையில் விலை உயர்ந்த ஐ போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் கைதானவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த வளாகத்தில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த தனி கிளை சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறை காவலர்கள் தனி கிளை சிறை வளாகத்தில் உள்ள கைதிகளின் அறைகளில் ஆய்வு செய்த போது அங்கு விலை உயர்ந்த ஐ - போன், சிம் கார்டு, சார்ஜர் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் பிரபலமான ரவுடிகளான சி.டி.மணி, அரும்பாக்கம் ராதா, வெற்றிவேல் ஆகியோர் இந்த தனி கிளை சிறையில் இருப்பதும் அவர்களிடம் இருந்து ஐபோன், சிம் கார்டு, கஞ்சா பறிமுதல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் வாய்தாவிற்காக நீதிமன்றத்திற்கு சென்ற போது அங்கு வந்த தனது நண்பர்களின் உதவியுடன் செல்போன், கஞ்சா ஆகியவற்றை போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு உள்ளே எடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும் பிரபல ரவுடிகள் தங்கியிருந்த கிளை சிறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் சிறையில் இருந்து சதித்திட்டம் தீட்டுவதற்காக விலை உயர்ந்த செல்போன், சிம் கார்டுகளை உள்ளே கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வடசென்னை சினிமா பட பாணியில் நீதிமன்றத்திற்கு சென்ற குற்றவாளிகள் விலை உயர்ந்த செல்போனை எடுத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business