வயதான தம்பதியினர் தற்கொலை

வயதான தம்பதியினர் தற்கொலை
X
வயதான தம்பதியினர் தற்கொலை

மதுரவாயலில் வேல் நகர் பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரவாயல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் இவருடைய மனைவி அஞ்சலை. அர்ஜுனன் (70) அஞ்சலை (60) இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. வயதான காலத்தில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனை அறிந்த அருகில் இருந்த அவரது உறவினர்கள் வீட்டின் கதவைத் தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இரண்டு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மதுரவாயல் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் இருவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!