பொங்கல் பண்டிகையையொட்டி வீடு தேடி புத்தாடை, காலண்டர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

பொதுமக்களுக்கு காலண்டர் ,புத்தாடைகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார்.
Door To Door Dress And Calender
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் சித்ராகுமார் ஆவார்.இந்நிலையில் இவரது சார்பாக இந்த ஊராட்சியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் ஊராட்சி மக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆங்கில புத்தாண்டு மற்றும் தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை வீடு,வீடாக சென்று தெரிவித்தார். .மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் காலண்டர் ,புடவை, இனிப்பு உள்ளிட்டவைகளை வழங்கி நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நிர்வாகிகள் தனஞ்செழியன், கோபி,வேலு,சீனிவாசன், ஏழுமலை,சுரேஷ்,ரஞ்சித், பிரசாத்,தங்கமணி,வெங்கட் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். மேலும் கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவராக சித்ரா குமார் பொறுப்பேற்ற முதல் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தந்து வருகிறார்
கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் ஒவ்வொரு விழா காலங்களில் ஏழை எளிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவது குறிப்பிட தக்கது. விழா காலங்களில் தங்களை தேடி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் ஊராட்சி மன்ற சித்ரா குமாருக்கு கிராம மக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu