பூந்தமல்லி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

பூந்தமல்லி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு  பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
X

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

பூந்தமல்லி அடுத்த மேப்பூர்தாங்கலில் அமைந்துள்ள கெங்கையம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் கொண்டு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த மேப்பூர்தாங்கலில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கெங்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோவிலில் வருடம் தவறாமல் ஆடி முதல் வெள்ளியில் பால் குடம் எடுப்பது அம்மனை வழிப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஆடி முதல் வெள்ளியான இன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள், சிவப்பு வண்ண ஆடைகளை அணிந்து மேப்பூர் செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க தலையில் பால்குடம் சுமந்து சுமார் 3. கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெங்கையம்மன் மேப்பூர் தாங்கலில் அமைந்துள்ள கெங்கையம்மன் ஆலயத்திற்கு பெண்கள் சாமி ஆடிய படியே ஊர்வலமாக வந்தடைந்தனர்.


பின்னர் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தும், அவர்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து பின்னர் தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள அம்மனை வழிபட்டால் குழந்தை வரம்,திருமண வரம் ஆகியவை உறுதியாக கிடைக்கும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு