ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில்  புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
X
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.
குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் அம்மனுக்கு 4லட்சத்தில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்றைய தினம் ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு ரூ. 4லட்சம் ரூபாய்க்கு 500, 100, 20,10 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுக்களை மாலைகள் போல கட்டி தோரணங்களால் மாட்டி விடப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் கோவிலின் மேல் பகுதி மற்றும் உட்பகுதி முழுவதும் வாழை, கொய்யா, பப்பாளி, ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products