டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X
திருமழிசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசால் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் திருமழிசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த குடோனில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் திருமழிசை, பூவிருந்தவல்லி, ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future