வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி திருவேற்காடு அருகே உள்ள கோலடி கிராமத்தில் ஏரியைய் ஒட்டி அரசுக்கு சொந்தமான சுமார் 45 ஹெக்டர் புறம்போக்கு நிலம் உள்ளது.இதில் 15 ஹெக்டர் பரப்பளவில் நிலத்தை சுமார் 1500 மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாய்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நேற்று நிலம் அளவீடு செய்யப்பட்டது.அதில் மேலும் புதிதாக 25 கட்டடங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.அதில் 7.கட்டடங்களில் 5 குடியிருப்புகள் யாரும் வசிக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து யாரும் வசிக்காத அந்த குடியிருப்புகளை அரசு அதிகாரிகள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.
இன்று மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்து இடிப்பதற்காக வருவாய் துறையினர் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்ற உத்தரவுபடி வீடுகளை இடிக்க வந்துள்ளதாகவும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். குடித்தண்ணீர்வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட வைத்து முறையாக வரி கட்டி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென தற்பொழுது இது பாதுகாப்பில்லாத இடம் என்று கூறி அரசு சார்பில் அதிகாரிகள் இந்த இடத்தினை நீதிமன்ற உத்தரவு எனக் கூறி முன்னறிவிப்பு ஏதும் இன்றி இடிப்பது எந்த விதத்தில் நியாயம். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோலடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu