தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
X

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது . இதில் திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி, கோடு வெளி சித்ரா குமார், கொமக்கன்பேடு வெங்கடேஸ்வரி தங்கராஜ், மாகரல் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா செல்வம், சேத்துப்பாக்கம் முரளி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, முனுசாமி , கோடுவெளி குமார்,ரகு, விஜயகுமார், தமிழ்செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு, பொதுமக்கள் மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பட்டா மற்றும் காப்பீடு அடையாள அட்டை ஆகியவை வழங்கினார்.

இம்முகாமில் ஆயிலச்சேரி, பாகல்மேடு, கன்னிகாபுரம், கோடுவெளி, கொமக்கன்பேடு, மாகரல், சேத்துப்பாக்கம், புன்னப்பாக்கம், தாமரைப்பாக்கம் , குருவாயல் ஆகிய 10 ஊராட்சிகளை சேர்ந்த 1200 கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுத்தனர் .

இதில் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் மற்றும் திமுக நிர்வாகிகள் ஜெகநாதன், ராஜேஷ், பாகல்மேடு நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!