/* */

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் நாசர் பேச்சு

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் நாசர் பேசியுள்ளார்.

HIGHLIGHTS

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் நாசர் பேச்சு
X

தாமரைப்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் 2000 பேருக்கு நலத்திட்டங்களை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமரைப்பாக்கத்தில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் மாவட்ட பிரதிநிதி டி.பாஸ்கர் வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலாளர் வெங்கல் வி.ஜே.சீனிவாசன், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் கோடு வெளி எம். குமார், ஒன்றிய அவை தலைவர் பி.ஜி.முனுசாமி, துணைச் செயலாளர்கள் இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், எஸ்.உமா சீனிவாசன், பொருளாளர் ஆர்.லோகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கல் ஜி.பாஸ்கர், கே.ஜி.அன்பு, வி.ஸ்ரீதர், எம். நாராயணசாமி, சுப்பிரமணி, எஸ்.ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு 2000 நபர்களுக்கு சில்வர் பத்திரம், புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம் உதவிகள் வழங்கி சிறப்புரையற்றினார்

அப்போது பேசிய அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் தமிழ்நாட்டில் ₹.62 ஆயிரம் கோடியில் இருந்த வருவாய்ப் பற்றாக்குறை ₹.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ₹,1000 உரிமைத் தொகை வழங்க அறிவிப்பு வெளியிட்டார்.

நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இவ்வளவு குறைவாக அ.தி.மு.க. வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. சில வாக்குச்சாவடிகளில் இரண்டு இலக்கத்தில் வாக்கு பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ் நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வது போல் இந்தியாவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல வழிக்காட்ட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் எல்லாம் அழைப்புவிடுத்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டு தான் அண்மையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டது.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், கலைஞர் ஆட்சியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமராக வரவேண்டும்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். என்று இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பூந்தமல்லி எம் எல் ஏ. ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லாபுரம் பி.ஜே. மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் மா.ராஜி, எஸ் ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், பா.நரேஷ் குமார். பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், பொன்.விமல், ஒன்றிய நகர பேருர் செயலாளர்கள் டி.தேசிங்கு, புஜ்ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன் , ஜி.ஆர்.திருமலை, ப.ச.கமலேஷ், ராஜி, ஜெகன், செம்பேடு செல்வம், சே.பிரேம்ஆனந்த், எம். காஞ்சனா முனுசாமி, கோபிநாத், கணேசன், காஜா, கணேசன், ரகு, பாஸ்கர், சேகர், சீனிவாசன், விஜயகுமார், சார்லஸ், அச்சுதன், ஏ.கே. எம்.சரத்குமார், எம்.சத்யா, கே.கணேசன், தனலட்சுமி முனுசாமி, மு.லட்சுமி முரளி, கே.சித்ரா குமார், டீ வெங்கடேஸ்வரி தங்கராஜ், சு.ரகு, சண்முகம். கலாநிதி, ஆஷா சுரேஷ் உட்பட ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் இளைஞர் அணி அமைப்பாளர் கே.என். சரத்குமார் நன்றி கூறினார்.

Updated On: 24 March 2023 11:28 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..