சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!
X

துணை நடிகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை கண்டித்து அப்பகுதி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகையான இவர் ஒரு குப்பையின் கதை உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது வீட்டின் எதிரே காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி வாலிபர்கள் சிலர் புறாவை எடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து பாண்டி லட்சுமி மற்றும் எதிர்தரப்பினர் என இரு தரப்பும் மாறி, மாறி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் துணை நடிகையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டின் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள் இதுபற்றி தெரிவிக்கையில், துணை நடிகை பாண்டி லட்சுமி, இந்த பகுதியில் பொதுமக்கள் யாராவது சிறிதுநேரம் நின்றாலோ அல்லது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசினாலோ செல்போனில் படம் பிடித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கிறார். கடை வைத்திருப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவரால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். துணை நடிகை மீது உரிய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

துணை நடிகைக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!