பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு
X

பைல் படம்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அட்கோ நகரில் பெண்ணிடம் நூதன முறையில் 5சவரன் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அட்கோ நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சீதா(45) பால் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கீழே பணம் கிடைப்பதாக சீதாவிடம் கூறியுள்ளனர். சீதாவும் இதை நம்பி பணத்தை எடுக்க கீழே குனிந்தார்.

அப்போது அவரது 5சவரன் செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சீதா பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!