கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பினரின் சர்வதேச மகளிர் தின விழா
வெள்ளியூர் ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் வெள்ளியூர் ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இக்கிராமத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்,தேசபக்தியை வலியுறுத்தும் கவிதை, நடனம், பாட்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பெண்கள் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,பங்கேற்ற பெண்களுக்கும்,முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களையும் பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளுக்கு,கார்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பிரியா அருணாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பப்பி, துணைத்தலைவர் முரளி கிருஷ்ணா மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், வெள்ளியூர் அரசு மருத்துவமனையின் டாக்டர்கள் சுபாஷ், ஜீவிதா, எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர் அகிலாரவிந்தர், தனியார் விளம்பர நிறுவனத்தின் மேலாளர் விஜயாஸ்ரீ, வெள்ளியூர் யூகோ வங்கியின் மேலாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சகாயமேரி, கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தசரதன், சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கார்டு களப்பணியாளர்கள் செந்தில்குமார் காயத்ரி, லலிதா, கங்கா, சோபனா, ஆஷா, ஜான்சி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பெண்கள் சுய உதவி குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu