இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவி உயிரிழப்பு
X
கல்லூரிக்கு சென்ற மாணவியின் மீது பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கல்லூரிக்கு சென்ற மாணவியின் மீது பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவரின் மகள் பாரதி (25). இவர் பூந்தமல்லி தண்டலம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி முதல் மாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி நேரத்தில் பாரதி தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, பட்டாபிராம் அமுதூர்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது. அப்போது அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வேகத்துடன் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து, பாரதியின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரதி வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பாரதியின் தலையின் மீது பேருந்து சக்கரம் ஏறியுள்ளது.

இந்த விபத்தில், பாரதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநர் செங்குன்றத்தை சேர்ந்த முனியாண்டியை (வயது 55) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future