அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்

அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்
X

கோப்பு படம் 

நல்லிணக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், சுயநலமான தலைவர்களால் அண்ணல் அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு பேசிய திருமாவளவன், மதுரையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியும், மாலை அணிவிக்க இடையூறும் செய்து வருகின்றனர். மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்களுக்கு புரிதல் சரியில்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க முன்னோடியாக செயல்பட்டவர் அண்ணல் அம்பேத்கர், சுயநலமான தலைவர்களால் அண்ணல் அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்பட்டுள்ளார். நல்லிணக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அம்பேத்கரை தலித் தலைவராக சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், சங்பரிவார் அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என எதிர்த்தவர்கள். அம்பேத்கர் சிலைகளை மட்டுமே உடைக்க முடியுமே தவிர அவரது சிந்தனைகளை உடைக்க முடியாது. பிஜேபிக்கு உண்மையான எதிரி அம்பேத்கர் தான். ராமதாஸ் ஆரம்ப காலத்தில் இருந்தது போல இருந்திருந்தால் இந்திய அளவில் இன்னொரு கன்ஷிராம் போல வளர்ந்திப்பார். சமூக நீதியை கைவிட்டு சாதிய ரீதியில் ராமதாஸ் மாறுபட்டு விட்டதாகவும் கூறினார்

Tags

Next Story
why is ai important to the future