திமுக அரசை கண்டித்து குட்டிக்கரணம் அடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
குட்டிக்கரணம் அடித்து நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக நகர கழகம் சார்பில், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கையில் பதாகை ஏந்தி திமுகவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல், ஒரு சிலர் திமுக அரசை கண்டித்து குட்டிக்கரணம் அடித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில், மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமத், சாபி உள்ளிட்ட பூவிருந்தவல்லி நகர திமுகவினர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu