தாமரைப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்
தாமரைப்பாக்கத்தில் நடந்த அ.தி.மு.க. 52வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசினார்.
தாமரைப்பக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 52 ஆவது துவக்க விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அ.தி.மு.க.-வின் 52-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது..இக்கூட்டத்துக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். கே.எஸ்.ரவிச்சந்திரன்,கே.சி.டி.கௌதமன், புட்லூர் ஆர்.சந்திரசேகர்,டி.பூங்கோவன்,டி.எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் குருவாயல் ஏ.தயாளன் வரவேற்றார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகர் ஜெயமணியன்,முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.ஏ.இராமணிமாறன்,தி.ப.கண்ணன்,கா.சு.ஜனார்த்தனம்,சி.ஒய்.ஜாவித்அகமது,விஜயலட்சுமிஜெயபால்,எஸ்.பி.ஆர்.கிஷோர்,க.வைத்தியநாதன்,அந்தமான் கே.முருகன் நிர்வாகிகள் நவநீதமுனுசாமி,கோடுவெளி எம்.குழந்தைவேலு,அமுதா பொன்பழனி,எம்.சுரேந்திரன்,ஜே.நரேஷ் பாபா,மேரிஏகாம்பரம், வி.இ.லிங்கம்,எஸ்.மனோகரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
இதில்,கழக அமைப்புச் செயலாளரும்,திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் கலந்து கொண்டு அ.தி.மு.க-வை கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆர் துவக்கியதற்கான காரணத்தையும்,தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் செய்யப்பட்ட நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.
மேலும்,தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பல்வேறு திட்டங்களை தி.மு.க.வினர் வாக்குறுதியாக அளித்து வெற்றி பெற்று பால் விலை,மின்சார கட்டணம்,பஸ் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்தி மக்களுக்கு துரோகம் செய்வதாக எடுத்துக் கூறினார்.முன்னதாக கணேஷ் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில்,ஏ.என்.திருவேங்கடம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu