பூந்தமல்லி அருகே பள்ளி கூடுதல் கட்டிடத்தை கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திறப்பு

பூவிருந்தவல்லி ஒன்றியம் திருமணம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ. 14லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்தை சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
MLA News- திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 113 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 8 வகுப்பறைகள் உள்ள இந்த பள்ளியில் 2 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டி தரப்படும் என தேர்தல் நேரத்தில் தி.மு.க சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஆ.கிருஷ்ணசாமி வாக்குறுதி அளித்தார். இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஷியாம பிரசாந் முக்கர்ஜி ரூர்பன் திட்டம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடுநிலை பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் பள்ளிக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் கிளைச் செயலாளர் ஜெ.சாக்ரடீஸ் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவருமான டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ மகா, திமுக ஒன்றிய நிர்வாகிகள் கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், ஜிசிசி.கருணாநிதி, வை.முனிவேல், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசும்பொழுது, மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடந்து கொண்டாள் வாழ்க்கையில் முன்னேறலாம். தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் தற்போது தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் வட்டார ஆணையர் ஜி.பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, வட்டார கல்வி அலுவலர் முகமது கனி சுல்கத் , நிர்வாகிகள் ஜி.சுகுமார், சி.அண்ணாகுமார், ஜி.பி.பரணிதரன், ஜி.சுகுமார், குணசேகரன், சர்மன்ராஜ், முரளி, வெங்கடேசன், மதன், ஜெயபாரதி, வடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை பி.பூங்கொடி நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu