படப்பிடிப்பு செட் குடோனில் பயங்கர தீ விபத்து; ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
குடோனில் பற்றிய தீயை அணைக்க போராடும் தீயணைப்புப்படையினர்.
சென்னை, மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் 'ஃப்லிம் டெக்கார்ஸ்' என்ற படப்பிடிப்பு மற்றும் திருமணங்களுக்கு செட் அமைக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் செட் அமைக்கும் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இங்கு திடீரென புகை மூட்டம் காணப்பட்டதால், அங்கிருந்த ஊழியர்கள் வந்து பார்த்தபோது, தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதனையடுத்து, தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் தீப்பற்றி எரியத் துவங்கியது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அருகே உள்ள பழைய கார் விற்பனை பாகம் விற்பனை தளங்களிலும் தீ பரவியது.
தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தில் ரூ. 1கோடி மேலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் தீ விபத்து குறித்து மதுரவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu