திருமழிசை அருகே சுடுகாட்டில் சடலத்தை எரிக்க வந்த வாலிபர் வெட்டிக் கொலை

திருமழிசை அருகே சுடுகாட்டில் சடலத்தை எரிக்க வந்த வாலிபர் வெட்டிக் கொலை
X

கொலை செய்யப்பட்ட நாகராஜ்.

பூந்தமல்லி அருகே சுடுகாட்டில் வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி அருகே தொழில் போட்டி காரணமாக மேளம் அடிக்கும் இளைஞரை மின் மயானத்திலே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருமழிசை பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் மேளம் அடிக்கும் தொழிலாளி நாகராஜ் (வயது 30).இவர் திருமழிசை பகுதியில் உள்ள மின் மயானத்தில் காவல்சேரி பகுதியைச் சேர்ந்த இறந்த ஆண் சடலத்தை எரியூட்டுவதற்காக அவர் உட்பட 3 பேர் பணிகளை மேற்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் நாகராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே நிலை குலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும் நாகராஜை வெட்டுவதை தடுக்க வந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரையும் வெட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.இதில் படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன, போலீசார் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிமதித்தனர்.

உயிரிழந்த நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.இந்த கொலை வழக்கு தொடர்பாக தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருமழிசை பகுதியைச் சேர்ந்த கிஷோர்(22), என்ற அப்பு என்பவரை வெல்லவேடு போலீசார் கைது செய்தனர்.மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயானத்தில் இறந்தவர் உடலை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வாலிபரை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருமழிசை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது