/* */

இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் தடுப்புச் சுவரில் மோதி பலி

சென்னை நெமிலிச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் தடுப்புச் சுவரில் மோதி பலியானார்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் தடுப்புச் சுவரில் மோதி பலி
X

விபத்தில் இறந்த அண்ணாமலை.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 20). இவர் ஆவடி அருகாமையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இவர் அதே கல்லூரியில் தன்னுடன் படித்து வரும் தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்ற போது , இருசக்கர வாகனைத்தை அண்ணாமலை ஓட்டியுள்ளார்.

அவர்கள் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி சர்வீஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் வேகமாக சென்றுகண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையில் இடையே உள்ள தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் அண்ணாமலை அருகிலிருந்த ஒரு மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

மேலும் உடன் சென்ற ஹரிஷ் மேம்பாலத்தில் இருந்து கீழேவிழுந்து படுகாயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 April 2022 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க