பூந்தமல்லியில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து விபத்து

பூந்தமல்லியில் சாலையில் சென்ற  கார் திடீரென தீப்பிடித்து விபத்து
X

தீப்பிடித்த எரிந்த கார்.

பூந்தமல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் தேவராஜ் இவரது நண்பர் பிரபு இருவரும் காரில் சென்னை காசிமேடு சென்று விட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி, டிரங்க் சாலை பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் இருந்து இருவரும் கீழே இறங்கிய நிலையில் காரில் இருந்து அதிக அளவு புகை வர ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர்களும், பொதுமக்களும் சேர்ந்து அந்த பகுதியில் கடைகளில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியாத நிலையில் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் காரில் தீயானது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. போக்குவரத்து நெரிச்சலால் சற்று தாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

இதையடுத்து பூந்தமல்லி போலீசாசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சாலையில் இருந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒரு வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அருகில் இருந்த தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதமானதால் கார் முற்றிலும் தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story