"40 இன்ச் எல்இடி டி.வி" வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
X
By - Saikiran, Reporter |16 May 2021 7:44 PM IST
மதுரவாயில் அடுத்த நூம்பல் பாலாஜி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 இன்ச் எல்இடி டி.வி திருட்டு, மதுரவாயல் போலீசார் விசாரணை.
சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் தங்குவதற்காக மதுரவாயல் அடுத்த நூம்பல் பாலாஜி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஜெய்சங்கர் அங்கு சீர்வரிசை பொருட்களான கட்டில், பீரோ, டி.வி உள்ளிட்ட பொருட்களை நேற்று முன்தினம் இறக்கி வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நேற்று மாலை அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த விலை உயர்ந்த 40- இன்ச் எல்இடி டி.வியை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஜெய்சங்கர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu