சந்தன மரத்தில் 30 சென்டிமீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட பாலவிநாயகர் சிலை
சிற்பி டி.கே.பரணி வடிவமைத்துள்ள தவழும் பால விநாயகர் சிலை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன மரத்தில் 30 செமீ உயரத்தில் தவழும் பாலவிநாயகர் சிலை வடிவமைத்து திருமழிசையைச் சேர்ந்த சிற்பி அசத்தி உள்ளார்.
சந்தன மரத்தில் 30 செமீ உயரத்தில் தவழும் எழில் கொஞ்சும் அற்புதமான பாலவிநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த சிற்பி டி.கே.பரணி வடிவமைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்த டி.கே.பரணி, சந்தன மரத்தாலான நுண்ணிய சிற்பத்தை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டின் விருதுகள், கிராப்ட்ஸ் எம்போரியத்தின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்த தவழும் பாலவிநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார் டிகே. பரணி. 30 சென்டிமீட்டர் உயரம், 23 செமீ அகலம், 8 செமீ குறுக்களவு கொண்டதாக மிகவும் அழகுற இந்த நுண்ணிய சந்தனச் சிலை உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க இவரது கற்பனையில் இந்த சிலை மிகவும் அழகான முறையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது.
விநாயகருக்கு மூஷிக வாகனம் குடைபிடிப்பது போலவும், மற்றொரு மூஷிக வாகனம் வெண்சாமரம் வீசுவது போன்றும், விநாயகருக்கு கிளி பழத்தை அளிப்பது போலவும், கீழே பாலவிநாயககர் தவழ்வது போலவும் இந்த அற்புதமாக சிலை உருவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெறவுள்ள கண்காட்சியில் இந்த சிலை வைக்கப்படவுள்ளது.3 மாதங்களில் இந்த சந்தன மர நுண்ணிய சிலையை டி.கே. பரணி உருவாக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த கைவினைக் கலைஞரான டி.கே. பரணி நுண்ணிய மரச் சிற்பங்களுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விதவிதமான அதே நேரத்தில் வித்தியாசமான விநாயகர் சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்யும் சிலைகள் அனைத்தும் சந்தன மரக்கட்டைகளால் ஆனது.
இவர் தனது தாத்தா காலம் முதல் இந்த சந்தன மர நுண்சிற்பக் கலையை செய்து வருகிறார். வழிவழியாக செய்து வரும் நிலையில் தற்போது அவரது மகனும் மகளும் இந்த கலையைச் செய்து வருகின்றனர். இவரது சிற்பங்கள் டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது தயாரிப்பில் உருவான ராதே கிருஷ்ணா சிலைதான் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்தியா வந்த போது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu