13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
X
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை; பூந்தமல்லி போலீசார் விசாரணை.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை; பூந்தமல்லி போலீசார் விசாரணை.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் அஜித் (32). இவரது 13 வயது மகன் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.

இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, சமையலறையில் சிறுவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

சிறுவன் பெற்றோரிடம் மொபைல் போன் கேட்டு அடம்பிடித்து வந்ததாகவும், படிக்காமல் மொபைல் போன் கேட்டதால் பெற்றோர் கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. சிறுவன் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
பொன்னேரி அருகே உள்ள தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம், கபடி போட்டி
பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை!
தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை:2 நண்பர்கள் கைது
வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி
புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா..!
நடிகருக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் :  சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கைது..!
மதுரவாயில் அருகே பனை விதைகள் நடும் விழா
ai marketing future