பூந்தமல்லி அருகே இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து 10 பவுன் நகை கொள்ளை

பூந்தமல்லி அருகே இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து 10 பவுன் நகை கொள்ளை
X

கொள்ளை நடைபெற்ற வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பூந்தமல்லி அருகே இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி அருகே இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டை,மேப்பூர் சாரதாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்( வயது 36), இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் இவரது சித்தி பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர்களது உறவினர் இல்ல நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் நடந்ததால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று வீட்டிற்கு வந்தனர்.

அப்போது இரண்டு பேரின் வீடுகளின் கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு வீடுகளிலும் சோதனை மேற் கொண்டனர்.

ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் வீட்டில் 8 சவரன் நகையும், பரமேஸ்வரி வீட்டில் இரண்டு சவரன் என மொத்தம் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. வெங்கடேசன் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் அதன் அருகிலேயே இருந்த அவரது சித்தி வீட்டிலும் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுத்தி உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு