1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்

1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்
X

மதுரவாயல் 

மதுரவாயல் பகுதியில் 1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்.

மதுரவாயல் பகுதியில் 1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்; கோயம்பேடு போலீசார் விசாரணை.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷஃபான் (71). இவரது வீட்டில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை அத்திப்பட்டை சேர்ந்த செல்வகுமார் (44), அரும்பாக்கத்தை சேர்ந்த மணிவண்ணன் (43), பிரதீப்குமார் (33), சதீஷ்குமார் (33) உள்ளிட்டோர் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஷஃபான் படுக்கை அறையில் இருந்த 1லட்ச ரூபாய் மதிப்பிலான கை கடிகாரங்கள் மற்றும் ஆவணங்கள் மாயமானது. இதுகுறித்து ஷஃபான் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் பெயிண்டிங் பணியில் ஈடுபட்ட 4 பேரிடமும் நேற்று முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..