பீர் பாட்டில் வெடித்ததில் டாஸ்மாக் ஊழியர் காயம்

பீர் பாட்டில் வெடித்ததில் டாஸ்மாக்  ஊழியர் காயம்
X
பூந்தமல்லி டாஸ்மாக்கில் பீர் பாட்டில் வெடித்ததில் ஊழியர் காயம்; சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.

சென்னை பூந்தமல்லியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் மகாலிங்கம். இவர் நேற்று கடைக்கு வந்து மதுபாட்டில்களை கணக்கீடு செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவருக்கு அருகே பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் விற்பனையாளர் மகாலிங்கத்திற்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்கள் மகாலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து பூந்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வெடித்து ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future