பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம், விஏஓ கைது

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம், விஏஓ கைது
X

சென்னை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது செய்யப்பட்டார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேப்பூர் விஏஓ சதீஷ்குமாரிடம் விண்ணப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த விஏஓ சதீஷ்குமார் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நாராயணன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாராயணனிடம் ரசாயனம் தடவிய ருபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினார்கள்.

அதை தொடர்ந்து விஏஓ அலுவலகத்தில் லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ சதீஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்து சதீஷ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் விஏஓ அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!