இந்திய வாலிபர் சங்கம்- மாணவர் சங்கம்- மாதர் சங்கத்தினர் சாலை மறியல்

இந்திய வாலிபர் சங்கம்- மாணவர் சங்கம்- மாதர் சங்கத்தினர் சாலை மறியல்
X

பொன்னேரியில் இந்திய வாலிபர் சங்கம்- மாணவர் சங்கம்- மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பி பரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது

பொன்னேரியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பி பரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி இந்திய வாலிபர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சாலை மறியல். நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது ஒரு மைனர் சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். ஜனவரி மாதம் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் டெல்லி சாலையில் போராட்டத்தில் இறங்கினர்.

மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட, விளையாட்டுத் துறை அமைச்சகம் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. காவல்துறை பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்தாலும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் நடத்திய தொடர் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது, நாட்டுக்காக சர்வதேச அளவில் பதக்கங்களும் புகழும் பெற்றுத் தந்த இந்தியாவின் தங்க மங்கைகள், தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், நாடு முழுவதும் இவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மற்றும் மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் புகாரில் சிக்கிய எம்பியை பாதுகாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு