பட்டமந்திரியில் மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்

பட்டமந்திரியில் மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
X

பைல் படம்

பட்டமந்திரி கிராமத்தில் மனைவி காணவில்லை என்று கணவன் போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ் என்பவரின் மனைவி கலையரசி (32) என்பவர் கணவரிடம் சண்டை போட்டு கொண்டு இரவு 11 மணியளவில் கலையரசி அவருடைய அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. குப்புராஜ் அவருடைய மாமனார் வீட்டிற்கு சென்று விசாரித்த பொழுது கலையரசி அம்மா வீட்டிற்கு செல்லவில்லை என தெரியவந்தது. பின்பு அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!