மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி
X

மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி 

பொன்னேரியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரியில் மாற்று திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் ஆகிய 3 மாத கால பயிற்சி விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் கற்றுத்தரப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மூகாம்பிகை நகரில் உள்ள சிறப்பு குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது.

விஜயகீதம் அறக்கட்டளை நிறுவனர் கீதா, தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் திறன் மேம்படவும், நிறைவாற்றலை பெருக்கும் விதமாக முதலாவதாக கட்டை சேர் ஒயர் பின்னும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

3 மாத கால பயிற்சிக்கு பின் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், அதேபோல் மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் கீதா தெரிவிக்கையில் இதுபோன்று குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவர்கள் யாரும் சார்ந்து இருக்காமல் சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள் என்றும், தெரிவித்தார். இதில் குழந்தைகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!