அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு
பசுமாடுகள் சிக்கிய உயிரிழந்த மின்கம்பி
பொன்னேரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன
திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர், புருஷோத்தமன் ஆகியோர் பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். நேற்று வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்ற இவர்களது இரண்டு பசு மாடுகள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இவர்களது பசு மாடுகள் இரண்டும், மேய்ச்சலுக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்து தெரியவந்தது.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பிகளால் அவ்வப்போது மழை காற்று வீசும் போது பலவீனம் அடைந்த இதுபோன்று மின்கம்பிகள் அறுந்து விழுந்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தாங்கள் பகுதியில் உள்ள இது போன்ற மின்கம்பிகளை கண்டறிந்து புதிய கம்பிகள் அமைத்து தர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சேதமடைந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்காமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாலேயே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி இரண்டு பசு மாடுகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu