யூ டர்ன் பாதையை அடைத்து கட்டாய வசூல்: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

யூ டர்ன்  பாதையை அடைத்து கட்டாய வசூல்:  லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

செங்குன்றம் அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, நல்லூர் சுங்கச்சாவடியில் ஏற்கனவே யு டர்ன் இருந்த நிலையில், தற்போது அதனை அடைத்து விட்டு சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், அதற்கு காவல் துறை உடந்தையாக இருப்பதாகவும் கூறி லாரி உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது பேசிய தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், 55 சதவீத விபத்துகள் சுங்கச்சாவடி சாலைகளில் தான் நடக்கிறது எனவும், பஞ்சாப் மாநிலத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசு எடுத்து வருவது போல், தமிழக முதல்வரும் அதே போல காலாவதியான சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ.-க்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் எனக்கூறி 3 மாதங்களில் எடுப்போம் எனக்கூறி 10 மாதங்களாகியும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மோடி ஆட்சிக்கு வரும் போது சுங்கச்சாவடியே இருக்காது எனக்கூறிய நிலையில் இதுவரையில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், வரும் 1-ஆம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு