சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்
சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்
பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை இன்று காணும் பொங்கல் செவ்வாய்க்கிழமை என்பதால் இதனை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்
இங்கு திருமண தடை வீடு கட்டுதல் நிலம் வாங்குதல் அரசியல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இக்கோவிலில் ஆறு வாரம் செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி கோவில் சுற்றி வலம் வந்தால் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலுக்கு சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் மேலாகவே வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் இக்கோவிலுக்கு பூஜை பொருட்கள் விற்க இடம் வசதி இல்லை என்பதால், சாலை இருப்பரங்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து பழம், தேங்காய் கடைகளை வைத்திருப்பதாலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது
மேலும் இது குறித்து கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் சிலர் தெரிவிக்கையில், இவ்வளவு பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய அளவு இடம் வசதி இல்லை என்றும், சில இடங்களில் அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் இதனால் முதியோர்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மிக இன்னலுக்கு ஆளாகுவதாகவும் கூறினர்
எனவே சம்பந்தப்பட்ட துறை பக்தர்கள் வந்து செல்வதற்கும் போக்குவரத்து நிறைத்து தவிர்க்க ஆக்கிரமித்துள்ள கடை அகற்றி அவர்களுக்கு வேறு இடத்தில் கடைகளை அமைத்து தரவும் பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்து செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu