மீஞ்சூர்: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தொழிற்சங்கங்கள் சார்பாக புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீஞ்சூர் பஜாரில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனே திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர். 7 மாதங்களாக தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

புதிய வேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் இழுத்து மூடும் அபாயம் இருப்பதால் உடனே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!