திருவள்ளூர் மாவட்ட செய்திகள்: சிஐடியு போராட்டம், சிறுவாபுரி கோவில்

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்: சிஐடியு போராட்டம், சிறுவாபுரி கோவில்
X

மத்திய அரசை கண்டித்து சிஐடியுவினர் நடத்திய சாலை மறியல் போராட்டம் 

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகள் பற்றிய தொகுப்பு

நாடு முழுவதும் சிஐடியு அமைப்பினர் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து சாலையில் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலை அருகே சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சிஐடியு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவா‌சி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 15ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்க கூடாது, புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும் மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்தமத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிறுவாபுரியில் அலைமோதிய பக்தர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.


நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சாலை இருபுரம் கடைகளை வைத்து சாலையை ஆக்கிரமிப்பதால் வாகன ஓட்டுகளுக்கும் பொது மக்களுக்கும் பக்தர்களும் மிகவும் சிரமப்பட்டனர்

Tags

Next Story