பொன்னேரி அருகே துலுக்கானத்தம்மன் ஆலய தீ.மிதி திருவிழா.

பொன்னேரி அருகே துலுக்கானத்தம்மன் ஆலய தீ.மிதி திருவிழா.
X

துலுக்கானத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா 

பொன்னேரி ஊரணம் பேடு கிராமத்தில் துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி வாயலூர் ஊராட்சி ஊரணம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மாரி துலக்காணத்தம்மன் திருக்கோவிலின் 25.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது,

கடந்த 10.தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சி, அம்மனுக்கு காப்பு கட்டி,விரதம் இருந்து, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளான கூழ்வார்த்தல், கிரகம் எடுத்தல், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

தினசரி ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, குங்குமம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. மாலை குழந்தைகள் முதல்,பெரியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராம எல்லையில் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம், பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து அங்கு காத்திருந்தனர். இதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட துலுக்காத்தம்மனை வாகனத்தில் வைத்து மேல தாளங்களுடன் ஊர்வலமாக சென்று ஆலயத்திற்கு பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் ஆலயத்தில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர், இத் திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து திருவிழாவை கண்டு களித்தனர்,

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, வானவேடிக்கைகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கோபி, உள்ளிட்ட திரளான முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers