மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
X

மீஞ்சூர் காவல்நிலையம்.

மீஞ்சூரை அருகே ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண்சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த எஸ்.ஆர். உத்தமபாளையம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி கனகவள்ளி (41). சம்பவத்தன்று சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த பழைய மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். எதிர்பாராமல் அது வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், கனகவள்ளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, தனது மனைவியின் பிரேதத்தை பெற்றுத் தருமாறு மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!