திருவள்ளூர் சோகம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் 2மகள்களுடன் தற்கொலை

திருவள்ளூர் சோகம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் 2மகள்களுடன் தற்கொலை
X
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உடல்நிலை பாதிக்கப்ப்டட முதியவர்கள் 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள புலியூர் ஊராட்சி கசுவா கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியாக வீடு கட்டிக்கொண்டு வசித்து வந்தவர் செல்வராஜ் (65). எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்தார். இவருடன் மூத்த மகள் ஹேமலதா (35), இளைய மகள் சாந்தி (30) ஆகியோரும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.

செல்வராஜின் பூர்வீகம் சென்னை ஆவடியை சேர்ந்த சின்னம்மன் கோவில் தெரு ஆகும். இவரது மனைவியும் ஒரு மகளும் இறந்ததால் மன வேதனையுடன் இருந்து வந்தள்ளனர். இதன் பின்னரே கசுவா கிராமத்திற்கு தனது மகள்களுடன் வந்துள்ளனர். மூத்த மகள் ஹேமலதாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதால் தந்தையுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் இவர்கள் இருந்துள்ளனர். எனவே தந்தை இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்துடன் 3 பேரும் கடந்த சில நாட்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில் இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் சங்கீத ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உருக்கமான கடிதம்

கிராம நிர்வாக அதிகாரி பாலு மற்றும் வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. வீட்டின் மின்விசிறி மாட்டும் இரும்பு வளையத்தில் மூன்று பேரும் இணைந்து கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 3 பேரும் இறந்து போய் 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது.

மேலும் அருகில் ஒரு புத்தகத்தில் கடிதம் எழுதி வைத்திருந்தார்கள். அந்த கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நாங்கள் இறந்த பின்னர் எங்களது உடலை கிராமத்தில் உள்ள சேவாலயா அறக்கட்டளையின் சார்பில் உடல் அடக்கம் செய்ய வேண்டும். எனவே இதற்காக எங்களிடம் உள்ள ரூ. 4,200 ரொக்கப் பணம் மற்றும் 6 கிராம் தங்க நகைகள், மேலும் நாங்கள் வசித்து வந்த இந்த வீட்டின் ஐந்தரை சென்ட் நிலத்தின் பத்திரம் ஆகியவற்றை இந்தக் கடிதத்துடன் வைத்துள்ளோம், அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் .

எங்களது உடலை எங்களது உறவினர்கள் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தனர். எனவே போலீசார் ரொக்கப்பணம், தங்க நகை, வீட்டுப் பத்திரம், கடிதம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். பின்னர் இறந்தவர்களின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!