பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா
X

பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தில் பழமை வாய்ந்த திருப்பாலீஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தில் பழமை வாய்ந்த திருப்பாலீஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கருவறையில் உள்ள மூலவர்களுக்கு அதிகாலை பால்,தயிர், சந்தனம், இளநீர்,தேன், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் தீப, தூப, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்றிரவு திருக்குளத்தில் குளத்தில் தெப்பத்தில் அம்பாளும், ஈஸ்வரரும் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் 3முறை தெப்பம் வலம் வந்தது. ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் இறைவனை வணங்கினர். இந்த விழாவை காண பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், ஆரணி, புதுவாயல், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவை கண்டு களித்தனர். அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்கவர் வான வேடிக்கைகளும் அரங்கேறின. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil