கிரேனிலிருந்து தவறி விழுந்த பொறியாளர்! எலும்பு முறிவு!

கிரேனிலிருந்து தவறி  விழுந்த பொறியாளர்! எலும்பு முறிவு!
X
பொன்னேரி அருகே அதானி துறைமுகத்தில் 12 அடிக்கிறேன் மீது பணியாற்றிய போது தவறி கீழே விழுந்து இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் கிரேன் மீது பணியாற்றிய பொறியாளர் தவறி கீழே விழுந்து கால் எலும்பு முறிவு. தனியார் மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மட்டும் விலை மாநிலங்களை சேர்ந்தவர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மணலியை சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்சினியரான உதயகுமார் (29) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் அதானி துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு அதானி துறைமுகத்திற்குள் சுமார் 12.அடி உயரத்தில் கிரேன் மீது வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார்.அப்போது இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கிரேன் மீதிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த உதயகுமாரை மீட்டு துறைமுகத்தின் ஆம்புலன்சில் ஏற்றி சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வருகின்றார் இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!