புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு
பொன்னேரியில் 3.75கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்
பொன்னேரியில் 3.75கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர்கள் கால கட்டிடத்தில் இயங்கி வந்தது. சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பிக்க முடியாமலும், விரிவாக்கம் செய்ய முடியாமல் இடநெருக்கடி காரணமாக பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறையினர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதனையடுத்து சுமார் 3.75கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேண்பாக்கம் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu