மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
X
மீஞ்சூரில் மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம் பழுதால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை மாற்று ரயிலில் அனுப்பினர்.

கும்மிடிப்பூண்டி சென்னை ரயில் மார்க்கத்தில் மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம் பழுதால் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மாற்று ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பழுது நீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இன்று காலை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற புறநகர் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடக்கும் போது பிரேக் பழுது ஏற்பட்டது.

இதனையடுத்து பழுது சரிபார்க்கப்பட்டு மீஞ்சூர் நோக்கி ரயில் புறப்பட்டு சென்ற நிலையில் மீண்டும் பிரேக் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேக் பழுது ஏற்பட்ட புறநகர் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

காலை நேரம் என்பதால் பள்ளிக்கும் பணிக்கும் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் அதிலிருந்த பயணிகளை இறக்கி பின்னால் வந்த கடற்கரை ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

புறநகர் ரயிலில் ஏற்பட்ட பிரேக் பழுதை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழுதடைந்த புறநகர் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பிற ரயில்கள் சேவை பாதிக்கப்படாமல் இயக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!