சரக்கு வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா

சரக்கு வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா
X

பள்ளி நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை ஏற்றதால் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிறுத்துவ தில்லை. இதைத்தவிர பள்ளிக்கு சரியான நேரங்களில் நாங்கள் செல்ல வேறு வழி இல்லை

.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளில் ஆரணி சுற்றுவட்டாரங்களான குமரப்பேட்டை பெரியபாளையம் மங்கலம் புதுப்பாளையம் ராள்ளபாடி காவா மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அரசு தரப்பில் மாணவர்களுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்குகின்றன. இந்த நிலையில் பள்ளி நேரங்களில் சரியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினாலும் சில நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லாத காரணத்தாலும் வேறு வழியின்றி மாணவர்கள் வருகின்ற லாரி குட்டியானை போன்ற சரக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மேலும், கிடைக்கும் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிய படியும் பயணம் செய்யும் அவல நிலையும் தொடர்கிறது.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிறுத்துவதில்லை. கூட்ட நெரிசல் காரணமாக பள்ளிக்கு சரியான நேரங்களில் நாங்கள் செல்ல வேறு வழி ஏதும் இல்லாத காரணத்தினால் சரக்கு மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறிச் செல்கின்றோம். பள்ளி நேரங்களில் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் வகுப்புகள் கவனிக்கும் முடியவில்லை என்றும். இதற்காகவே போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். இதுபோல ஆபத்தான பயணங்களை தவிர்க்க வேண்டும்.அரசு கவனம் செலுத்தி மாணவர் நலனை கருதி பேருந்துகளை கட்டாயமாக நிறுத்தி மாணவர்கள் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்களும் மாணவர்கள் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil