வெடி வெடித்து தெருநாய் உயிரிழப்பு: போலீஸார் வழக்கு பதிவு
பைல் படம்
மீஞ்சூர் அருகே வெடி வெடித்து வாய் சிதறி தெருநாய் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தமது வீட்டின் அருகே வெடி வெடித்தது போல பலத்த சப்தம் கேட்டது. பின்னர் வெளியே வந்து பார்த்த போது, தங்களது பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று வாய் சிதறி ரத்தக்கறையுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த தெரு நாய் உயிரிழந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளை நிலத்தில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக சட்ட விரோதமாக ஏதேனும் வெடி வைக்கப்பட்டு அதனை கவ்வி கொண்டு வந்து கடித்ததால் தெருநாய் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu