புயல் எச்சரிக்கை: பழவேற்காட்டில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பழவேற்காட்டில் படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதன் பின்னர் புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பழவேற்காட்டில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் மீன்வளத்துறையினரின் அறிவுரையின் பேரில் கடலுக்கு செல்லவில்லை .
திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வேலன் உத்தரவிட்டுள்ளார்.
காற்றின் வேகம் 80கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பழவேற்காட்டில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu