தடப்பெரும்பாக்கத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

தடப்பெரும்பாக்கத்தில்  ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
X

திருவேங்கிடபுரம் தசரத நகர் சீனிவாச பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

பொன்னேரி அருகே, தடப்பெரும்பாக்கத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தடப்பெரும்பாக்கம் ஊராட்சி. இங்குள்ள தசரத நகர் பூங்காவில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னாள் பொன்னேரி எம்எல்ஏ பொன் ராஜா, மீஞ்சூர் ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் ஜி.ரவி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கிருஷ்ணாபுரம் பி.டி.பானு பிரசாத், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

முடிவில் புதியதாக திருமணம் நடக்க இருந்த பெண் ஒருவருக்கு மாங்கல்யம், சீர்வரிசை வழங்கப்பட்டது. உபயதாரர்களூக்கு சிறப்பு தீபாராதனை நடத்தி திருமங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!